'கடு கடு' கடாபிக்குள் ஒளிந்திருந்த 'ஜிலேபி' மனசு!

லிபியாவில் மக்கள் புரட்சி வெடித்து தற்போது நாடு போராளிகள் வசமாகியுள்ளது. இதனால் அதிபர் கடாபி நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. கடாபியை பதவியில் இருந்து தூக்கிய பிறகும் லிபியாவில் அமைதி இல்லை. காரணம் யார் நாட்டை ஆளுவது என்று போராளிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி லிபியாவே கதிகலங்கி இருக்கும் வேளையில் திரிபோலியில் உள்ள தனது வீடு உள்ள பாப் அல் அஸீஸியா வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் ஒன்றில் கடாபி தனது பேரக்குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவால் லிபியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பழைய வீடியோ என்று தெரிகிறது. அந்த வீடியோவில் கடாபி தனது பேத்தியை கொஞ்சுகிறார், அவர் படுத்திருக்க பேத்தியும், பேரனும் அருகில் அமர்ந்து கொண்டு 'தாதா' தாத்தாவிடம் கதை பேசிக் கொண்டிருக்கின்றனர், குடும்ப சகிதமாக அமர்ந்து உணவு உண்ணுகின்றனர், பேரக்குழந்தைகளுக்கு, தனது இரும்புக் கரத்தால் உணவு ஊட்டுகின்றார் கடாபி.
'நாயகன்' பட பாணியில், கடாபி தனது பேத்தியிடம் நான் நல்லவன் தானே என்று கேட்க அதற்கு அந்த சிறுமி இல்லை என்று விளையாட்டாக பதில் அளிக்கிறாள்.
இந்த காட்சிகளைப் பார்ப்பவர்கள் எப்பொழுது பார்த்தாலும் கடு, கடு என்று இருக்கும் கடாபிக்கு சிரித்துப் பேசி, விளையாடக் கூடத் தெரியுமா என்று அதிசயிக்கின்றனர்.
இந்த வீடியோ கடந்த 2005-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications