அமிதாப் பச்சன், முலாயம் சிங் யாதவ் நன்றி கெட்டவர்கள்: ஜெயப்பிரதா சாடல்

ஓட்டுப் போட எம்.பி.களுக்கு லஞ்சம் கொடுத்த வழ்ககில் கைதாகி முன்னாள் சமாஜ்வாடி உறுப்பினர் அமர் சிங் திஹார் சிறையில் உள்ளார். அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அமர்சிங்கின் தீவிர ஆதரவாளரான ஜெயப்பிரதா கூறுகையில், "அமர் சிங் மட்டும் வாயைத் திறந்தால் பெரும் புள்ளிகள் எல்லாம் சிக்குவார்கள். ஆனால் அவர் பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்கிறார். அது தான் அவர் குணம்.
அமிதாப் பச்சனுக்கு கஷ்டக்காலத்தில் உதவி செய்தவர் அமர் சிங். ஆனால் தற்போது அமர் சிங் பிரச்சனையில் இருக்கும்போது அமிதாப் கண்டுகொள்ளவேயில்லை.
முலாயம் சிங் யாதவை உத்திர பிரதேச முதல்வராக்கியது அமர் சிங் தான். முலாயமும் சரி, காங்கிரஸும் சரி அமர் சிங்கிற்கு உதவ முன் வரவில்லை. நடிகர் ராஜ்பாபரும் நன்றி கெட்டவர் தான்.
இந்த வழக்கிற்கும் அமர் சிங்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் ஒரு அப்பாவி. வேண்டும் என்றே அவரைக் குறிவைக்கிறார்கள். அவர் கொடுத்ததாகக் கூறப்படும் பணம் எங்கிருந்து வந்தது? டெல்லி போலீஸிடம் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. அவர் இமேஜைக் கெடுக்க வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தான் இப்படி செய்திருக்கிறார்கள்.
சிறையில் இருக்கும் கழிவறை சுகாதாரமான முறையில் இல்லை. இதனால் அவர் சிரமப்படுகிறார். அவருக்கு உடல் நலக் குறைவு இருப்பதால் அவர் சிறையில் இருப்பது சரியல்ல.
எனக்கு நீதித் துறையின் மீது நம்பிக்கை உள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்து அவர் ஒன்றும் லாபம் அடையவில்லையே. பின் அமர் சிங் ஏன் சிறையில் இருக்கிறார் என்று சாமானிய மக்கள் கேட்கின்றனர்" என்றார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications