அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீன் மனு 7வது முறையாக ஒத்திவைப்பு: 12-ம் தேதி விசாரணை
தூத்துக்குடி: திமுக நிர்வாகியை கொலை செய்யத் தூண்டிய வழக்கில் கைதான திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 12-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷை கொலை செய்யத் தூண்டியது, இங்குள்ள நகர திமுக அலுவலகத்திற்கு தீ வைக்கத் தூண்டியது, டாஸ்மாக் பார் மீது குண்டுவீசத் தூண்டியது ஆகிய 3 வழக்குகளில் திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த 3 வழக்குகளிலும் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதி பிரபுதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் சந்திரசேகர் வாதாடுகையில், அனிதா ராதாகிருஷ்ணனை ஆறுமுகநேரி நகர திமுக அலுவலகத்திற்கு தீ வைக்கத் தூண்டியது, டாஸ்மாக் பார் மீது குண்டுவீசத் தூண்டியது ஆகிய 2 வழக்குகளில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்திருப்பதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை 9-ம் தேதிக்கு( இன்று) ஒத்திவைத்தார்.
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே குண்டுவெடித்ததை கண்டித்து வழக்கறிஞர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதால் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்படுவது இது 7-வது முறையாகும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications