For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1 வீரரை விடுவிக்க 477 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்

Google Oneindia Tamil News

ஜெருசலேம்: பாலஸ்தீனர்களிடம் சிக்கிய 25 வயதான ராணுவ வீரர் ஒருவரை உயிருடன் மீட்க, 447 பாலஸ்தீன பிணைக் கைதிகளை இஸ்ரேல் விடுவி்த்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் புகுந்த பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல், கொலை, கொள்ளை, கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை, இஸ்ரேல் கைது செய்து வைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகள் முன் இஸ்ரேல்-காசா எல்லை பகுதியில் நடந்த மோதலின் போது, 19 வயதான இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாத் சாலீத் என்பவரை, ஹமாஸ் என்ற பிரிவை சேர்ந்தவர்கள் பிணைக் கைதியாக பிடித்து சென்றனர்.

கிலாத் சாலீத்தை விடுவிக்க இஸ்ரேல் அரசு, ஹாமஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின், கிலாத் சாலீத்தை விடுவிக்க ஹமாஸ் நிபந்தனையின் பேரில் சம்மதித்தது. இதன்படி, 1,027 பாலஸ்தீன பிணைகைதிகளை, இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக 477 பாலஸ்தீன பிணை கைதிகள் இஸ்ரேல் நேற்று விடுவித்தது. இதற்கு பதிலாக கிலாத் சாலீத் இஸ்ரேல் நாட்டு எல்லையை கடந்து உள்ளே வந்தார்.

அடுத்தக்கட்டமாக 550 பாலஸ்தீனர்களை, இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். இந்த ஒப்பந்தப்படி இரு தரப்பினரும் பிணைக்கைதிகளை விடுவித்தால், இஸ்ரேலின் மீதான தாக்குதல் அதிகரிக்கும். இஸ்ரேலை சேர்ந்த 1 ராணுவ வீரனுக்காக 1,027 பாலஸ்தீனர்களை விடுவிக்க, இஸ்ரேல் சம்மதித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிட்டத்தக்கது.

அதேபோல இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர், பாலஸ்தீனத்திடம் இருந்து உயிரோடு நாடு திரும்புவது இதுவே முதல்முறை. இந்த பட்டியலில் 450 ஆண்கள் மற்றும் 27 பெண்கள் உள்ளனர். ஒப்பந்தபடி மீதமுள்ள 550 பாலஸ்தீனர்கள் அடுத்த 2 மாதங்களில் விடுவிக்கப்படுவர் என தெரிகிறது.

இஸ்ரேல் எல்லைக்குள் வந்த கிலாத் சாலீத் மெலிந்து காணப்பட்டார். அவரை உறவினர் மற்றும் நாட்டு மக்கள் எல்லையில் நாட்டு கொடிகளுடன் நின்று வரவேற்றனர். அவரது குடும்பத்தினர் அவரை ஆர தழுவி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

English summary
Israeli soldier Gilad Shalit came into the Israeli border, after the 477 Palestinians crossed in to their region. Israel had agreed to release 1,027 Palestinians on last week. The released 477 Palestinian prisoners were captured by the Israel as bombers, kidnappers and killers. The remaining 550 Palestinians will be released within next 2 months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X