For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன்னர் அழைப்பு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் தலைமையில் சவூதி புறப்பட்ட இந்திய நல்லெண்ண குழு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: சவூதி அரேபிய அரசின் விருந்தினர்களாக இந்தியாவின் சார்பில் ஹஜ் நல்லெண்ண குழு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் 20 பேர் சவூதி புறப்பட்டனர்.

சவூதி அரேபிய அரசின் அழைப்பின் பேரில் அந்நாட்டின் விருந்தினர்களாக இந்தியாவின் சார்பில் 20பேர் கொண்ட குழு கடந்த 29ம் தேதி டெல்லியில் இருந்து சவூதிக்கு புறப்பட்டது. அந்த குழுவுக்கு புனித ஹஜ் நல்லெண்ண குழு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை தாங்கி சென்றுள்ளார்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ்ஜை நிறைவேற்ற உலகம் முழுவதிலும் இருந்து 40 லட்சம் முஸ்லிம்கள் சவூதி அரேபியா செல்கின்றனர். இந்தியாவில் இருந்து மட்டும் 175,000 பேர் செல்கின்றனர். இவர்கள் அனைவரும் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி புனித ஹஜ்ஜுக்காக அரபா மைதானத்தில் ஒன்று கூடுகின்றனர்.

சவூதி அரேபிய அரசின் சார்பில் அந்நாட்டு மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் ஆல்-சவூத் இந்தியாவிலிருந்து ஹஜ் நல்லெண்ண குழுவாக சவூதி வர அழைப்பு விடுத்திருந்தார்.

இதனை ஏற்று இந்தியா சார்பில் 20 பேர் அடங்கிய குழுவினர் கடந்த 29ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு டெல்லியிலிருந்து சவூதிக்கு புறப்பட்டனர். நவம்பர் 12ம் தேதி இக்குழுவினர் டெல்லி திரும்புகின்றனர். இக்குழுவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையேற்று அழைத்துச் சென்றுள்ளார்.

இக்குழுவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி. அப்துல் மஜீத், பத்திரிக்கையாளர்கள் சந்திரிகா முஹம்மது குட்டி, மாசூம் கைரா பாதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் புறப்படும் முன்பு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ.அஹமதுவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி. அப்துல் வஹாப் இக்குழுவினரை டெல்லி விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தார்.

சென்னையில் வழியனுப்பு விழா

நல்லெண்ண தூதுக் குழுவாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோருக்கு தலைமையகமான காயிதே மில்லத் மன்ஜிலில் கடந்த 28ம் தேதி மாலை வழியனுப்பு விழா நடந்தது.

காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில செயலாளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் எம்.ஏ. சத்தார், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், எம்.எஸ்.எஃப் மாநில செயலாளர் ஏ. செய்யது பட்டாணி, முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை மேலாளர் இப்ராஹீம் மக்கீ, பிரபல எழுத்தாளர் ஆளுர் ஷா நவாஸ், காஞ்சி மாவட்ட தலைவர் எம். எஸ். அப்துல் வஹாப், நெல்லை மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ். மீரான் மைதீன், கவிஞர் ஷேக் மதார் ஆமிரி, நாகூர் மீரான், அய்யூப் கான், தாம்பரம் அலி ராஜா, வேலூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கே.என். முஹம்மது ஹனீப், அய்யூப் பாஷா,

மணிச்சுடர் நாளிதழ் மேலாளர் எஸ். முஹம்மது முஹைதீன், செய்யது இப்ராஹீம், முஸ்லிம் லீக் அலுவலக பொறுப்பாளர் உஸ்மான், அலுவலக பணியாளர்கள் இக்பால், ஜலால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தி வழியனுப்பினர். மணிச்சுடர் மௌலானா மௌலவி எம். ஏ. ரஹ்மத்துல்லாஹ் ஆமிரி ஜமாலி துஆ ஓதினார்.

English summary
A 12 member team led by IUML TN chief KM Kader Mohaideen has left for Saudi Arabia from New Delhi on october 29. They have left for Saudi on King's invitation. The team will return to India on november 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X