For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீசுக்கு டிமிக்கி கொடுத்த ஆள் மாறாட்ட கல்யாணசுந்தரம் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திண்டிவனம்: ஆள்மாறட்டம் செய்து தேர்வு எழுதிய புகாரில் தேடப்பட்ட புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் கடந்த செப்டம்பர் மாதம் திண்டிவனம் தாகூர் மெட்ரிக் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தனி தேர்வு எழுதியபோது ஆள் மாறாட்டம் செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர். மேலும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று விழுப்புரம் போலீசார் 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைவானார்.

இதனையடுத்து அமைச்சர் கல்யாணசுந்தரம் ஆஜராக உத்தரவிடவேண்டும் என்று திண்டிவனம் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் புதன்கிழமை ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி அமைச்சர் கல்யாணசுந்தரம் புதன்கிழமை காலை திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பின்னர் வழக்கை வரும் 11-தேதி ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் கல்யாணசுந்தரம் ஆஜராக வேண்டும் என்று உத்தவிட்டார். ஆள்மாறாட்ட வழக்கில் கல்யாணசுந்தரத்தை கைது செய்ய நவம்பர் 4-ம் தேதி வரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே நவம்பர் 11-ம் கல்யாணசுந்தரம் ஆஜராகும்போது அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Puducherry education minister PML. Kalyanasundaram appeared before Judicial Magistrate Court in Tindivanam on Wednesday. Police was searching him in a case related to sending proxy to write SSLC examination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X