For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்துகுஷ் மலைப் பகுதியில் நிலநடுக்கம்- காஷ்மீர், டெல்லி நடுங்கின

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள இந்துகுஷ் மலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் இந்தியாவின் வட மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் நில அதிர்வு ஏற்பட்டது.

காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 5.5 ரிக்டராக இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர். சில விநாடிகள் இது இருந்தது.

இதேபோல டெல்லி, ஹரியானா, பஞ்சாப், சட்டிஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

அதேபோல ஆப்கான் தலைநகர் காபூல், பாகிஸ்தானின் பெஷாவர் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்துத் தெரியவில்லை.

English summary
Tremors were felt in Srinagar today after an earthquake in the Hindukush region, near the Afghanistan-Pakistan border. However, there are no reports of any damage yet. The intensity of the earthquake was 5.5. Media reports say tremors were also felt in Peshawar, SWAT area on Afghanistan-Pakistan border and in Kabul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X