For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2012 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக தாய் பிரதமர் பங்கேற்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Yingluck Shinawatra
டெல்லி: 2012 –ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்து நாட்டின் பிரதமராக யிங்லுக் ஷினாவத்ரா கடந்த ஆகஸ்டு மாதம் பதவி ஏற்றார். இவர் தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர் ஆவார். இவர் அடுத்த ஆண்டு (2012) ஜனவரி 26ஆம் தேதி நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு தலைமை விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்றவது தலைவர்

இது உண்மையானால், குடியரசு தின விழாவில் பங்கேற்கும் 3-வது தென் கிழக்கு ஆசிய தலைவர் இவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே, அரசியல், வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் நல்லுறவு உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு இரு நாடுகளும் 60-வது ஆண்டு தூதராக நட்புறவை கொண்டாடின. இந்த நிலையில் 2012 – ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவில் புதிய பிரதமர் பங்கேற்க உள்ளது சிறப்பம்சமாகும்.

இந்திய குடியரசு தின விழாவில் கடந்த 3 ஆண்டுகளாக தென் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். 2010-ம் ஆண்டில் தென்கொரியா அதிபர் லீ மியூங்-பக்கும், 2011-ம் ஆண்டில் இந்தோனேஷியா அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயோனோவும் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு (2012) நடை பெறும் குடியரசு தின விழாவில் தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினா வத்ரா பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Third guest from Southeast Asia to be accorded the honour in as many years. Yingluck Shinawatra, elected as Thailand’s first female prime minister in August this year, will be the chief guest for India’s 2012 Republic Day celebrations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X