For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடைசி நாட்களில் சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்பட்ட கடாபி

By Siva
Google Oneindia Tamil News

Gaddafi
த்ரிபோலி: கொல்லப்பட்ட முன்னாள் லிபிய அதிபர் கடாபி யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருந்த நாட்களில் உணவு கூட இல்லாமல் கஷ்டப்பட்டார் என்று அவரது பாதுகாப்பு படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கடாபியின் உயர் பாதுகாப்பு அதிகாரி மசூர் தாவ் சிஎன்என்-இடம் கூறியதாவது,

சிர்டே நகரில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்தபோது கடாபி உணவுக்கு கூட கஷ்டப்பட்டார். ஏதோ கிடைத்ததை வைத்து வாழ்ந்தார். அங்கு தன் பெட்டியில் வைத்திருந்த புத்தகங்களை வாசித்து பொழுதைப் போக்கினார்.

மாட மாளிகையில் சகல வசதியுடன் வாழ்ந்த கடாபி கடைசி காலத்தில் மின்சார வசதி இன்றி ஒரு டிவி கூட இல்லாமல் இருந்தார்.

போராளிகள் தான் இருக்கும் இடத்தை நோக்கி வருகிறார்கள் என்று தெரிந்ததும் அவர் பதட்டமாக இருந்தார். அவருக்கு பயம் வந்துவிட்டது என்று தெரிந்தது. சிர்டேவில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான ஜாரேப் என்னும் கிராமத்திற்கு தப்பித்துச் செல்ல விரும்பினார்.

தனது கடைசி நாட்களை, உயிரை பிறந்த மண்ணில் விட ஆசைப்பட்டார் போலும். நான் ஏன் கடாபியுடன் சேர்ந்தேன் என்று வருத்தப்படுகிறேன். ஆனால் காலம் சென்று வருத்தப்பட்டு என்ன பயன் என்றார்.

மிஸ்ரதாவில் உள்ள சிறையில் இருக்கும் மன்சூருக்கு லிபியா பற்றி யாருக்கும் தெரியாத ரகசியங்கள் கூட தெரியுமாம். அதனால் அவரை பிளாக் பாக்ஸ் என்றே கடாபியின் ஆட்கள் அழைத்துள்ளனர். கடந்த 1996ம் ஆண்டு அபு சலிம் சிறை படுகொலை தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

English summary
Slain Libyan leader Gaddafi scavenged for food when he was hiding in an abandoned house in Sirte, said one of the dictator's top security officer. Gaddafi who lived a luxurious life was forced to live without electricity during his absconding days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X