For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரத்து குறைவு: காய்கறி விலை கடும் உயர்வு

Google Oneindia Tamil News

Veggies
பாவூர்சத்திரம்: வரத்து குறைவால் பாவூர்சத்திரத்தில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பாவூர்சத்திரத்தில் கடந்த வாரம் ரூ.24க்கு விற்பனையான 1 கிலோ கத்தரிக்காய் தற்போது ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் தக்காளி ரூ.36, வெண்டை ரூ.24, பாகற்காய் ரூ.24, முருங்கைகாய் ரூ.20, மிளகாய் ரூ.15, மூட்டைகோஸ் ரூ.12, சவ்சவ் ரூ.10, பல்லாரி ரூ.13லிருந்து ரூ.16, வெங்காயம் ரூ.30லிருந்து ரூ.40 வரையிலும் விற்பனை செய்யபடுகிறது.

2 வாரத்திற்கு முன்பு ரூ.20க்கு விற்ற 1 கிலோ மல்லி இலையின் விலை கிடுகிடுவென உயர்ந்து தற்போது ரூ.60க்கு விற்கப்படுகிறது. தொடர் மழையால் மல்லி இலை மகசூல் சேதம் அடைந்ததால் குறைந்த அளவே விற்பனைக்கு வருகிறது. இதனாலேயே விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

English summary
Northeast monsoon is getting severe in most parts of Tamil Nadu. The continuous rain affects the production of veggies so the prices of vegetables have increased sharply in Pavursathiram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X