For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 ஆண்டுக்குப் பின் புத்ததேவுடன் பேசிய மம்தா பானர்ஜி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வசர் புத்ததேவ் பட்டாச்சாரியாவை நேரில் சந்தித்து கொல்கத்தாவில் நடைபெறும் திரைப்பட விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் இருவரும் இப்போது தான் முதன்முதலில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியது தொடர்பாக முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவிற்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தற்போதய முதல்வருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் உருவானது.

இதனால் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசுவதை தவிர்த்தனர். 2008ம் ஆண்டு இருவரும் நேரில் சந்தித்து சிங்கூர் விவகாரம் குறித்துப் பேசினர். இதையடுத்து மூன்றாண்டுகள் கழித்து மேற்கு வங்க முதல்வராக கடந்த மே மாதம் மம்தா பதவியேற்றார். அப்போது கூட இருவரும் வணக்கம் மட்டுமே தெரிவித்துக் கொண்டனர்.

திரைப்பட விழாவிற்கு அழைப்பு:

இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெற உள்ள 17வது திரைப்பட விழாவில் பங்கேற்க புத்ததேவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் மம்தா.

அங்காவது 3 ஆண்டுகள் கழித்து முதல்வரும் முன்னாள் முதல்வரும் பேசிக் கொள்கின்றனர்.. நம் ஊரில்!

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee today spoke to her Marxist predecessor and arch political rival Buddhadeb Bhattacherjee for the first time in over three years and invited him to Kolkata Film Festival beginning tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X