For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய குழு நாளை முதல் 3 நாட்கள் ஆய்வு:

Google Oneindia Tamil News

வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

அணுமின் நிலையம் தொடர்பாக மக்களின் அச்சத்தைப் போக்க நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துநாயகம் தலைமையில் சென்னை அடையார் புற்று நோய் சிகிச்சை மையத்தின் தலைவர் சாந்தா, வியன்னாவில் உள்ள சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் கதிரியிக்க பாதுகாப்பு பிரிவின் ஓய்வு பெற்ற இயக்குனர் அய்யர், மும்பை டாடா நினைவு மருத்துவமனை டாக்டர் பரமேஷ், மங்களூர் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் மத்யஸ்தா, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் துறை இயக்குனர் சுகுமாறன், மும்பை மீன்வள கல்வி மையத்தின் பேராசிரியர் பாய், ஹைதராபாத் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ஹர்ஸ் கே குப்தா உள்ளிட்ட 15 பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்தது.

அந்த குழுவினரில் 10 பேர் கடந்த 8ம் தேதி நெல்லை வந்தனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய குழுவும், மாநில குழுவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடந்தின. பின்னர் மத்திய குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மணி நேரம் முதற்கட்ட ஆய்வு பணியை மேற்கொண்டது. மக்களின் சந்தேகங்களுக்கு மத்திய குழுவினர் அளிக்கும் பதில்களை தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

2ம் கட்டமாக நாளை முதல் 3 நாட்கள் இக்குழுவினர் அணுமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர். வரும் 17ம் தேதி ஆய்வு நிறைவடைகிறது. அதன் பிறகு போராட்டக் குழுவினர் மற்றும் மக்கள் கேட்ட 50 கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார்கள் என்று தெரிகிறது.

English summary
15 member expert team set up by the centre will inspect Koodankulam nuclear power plant for 3 days starting from november 15. It is expected that they will answer the 50 questions putforth by the protesters once the inspection is over.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X