For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் தனியார் பஸ் கட்டணம் உயர்ந்தது!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து இன்று முதல் தனியார் பஸ் கட்டணமும் உயர்ந்துவிட்டது.

சென்னை நகர பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாக உயர்த்தபட்டுள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் செமி டீலக்ஸ் புறநகர் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 32 பைசாவிலிருந்து 56 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

வெளியூர்களுக்கு செல்லும் சூப்பர் டீலக்ஸ் சொகுசு பேருந்துகள் மற்றும் சூப்பர் டீலக்ஸ் புறநகர் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 38 பைசாவிலிருந்து 60 பைசாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு 52 பைசாவிலிருந்து 70 பைசவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல பிற மாவட்டங்களிலும் குறைந்தபட்ச, அதிகபட்ச பேருந்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

சென்னை நீங்கலாக, தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக அதிகரிக்கப்படுள்ளது. அதிகபட்ச பேருந்து கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரை குறைந்தபட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.

இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதலே அமலுக்கு வந்துவிட்டது. இந் நிலையில் இன்று காலை முதல் தனியார் பஸ்களிலும் கட்டணம் உயர்ந்துவிட்டது.

English summary
Following the hike in government bus fares, the private operators too hiked the ticket fares in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X