For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிப்தில் கடும் போராட்டங்களுக்கு மத்தியில் நாளை தேர்தல்!

By Chakra
Google Oneindia Tamil News

கெய்ரா: எகிப்து நாட்டில் ராணுவத்தினருக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில் நாளை அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

30 ஆண்டு காலம் எகிப்து நாட்டை ஆண்டு வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததையடுத்து அவர் பதவி விலகினார். இந்த மக்கள் போராட்டத்துக்கு ராணுவமும் மறைமுக ஆதரவு அளித்தது.

முபாரக் பதவியை விட்டு வெளியேறியதும் இடைக்கால அரசு எதையும் அமைக்காத ராணுவம், ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து நாடு முழுவதும் ராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.

இதைத் தொடர்ந்து முறைப்படி தேர்தல் நடத்துவோம் என்று அறிவித்தது ராணுவம். ஆனாலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தேர்தல் எந்த அளவுக்கு சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்கும் என்பது தெரியவில்லை.

இதனால், ராணுவத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முதலில் ராணுவம் பதவி விலகிவிட்டு, இடைக்கால அரசை அமைத்துவிட்டு, தேர்தலை நடத்த வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

ஆனால், இதை ராணுவம் ஏற்க மறுத்து போராட்டத்தை ஒடுக்கி வருகிறது. மக்களை சமாதானப்படுத்தும் வகையில் 78 வயதான கமால் அல் கன்சூரியை இடைக்கால பிரதமராகவும் ராணுவம் நியமித்தது. இதையும் மக்கள் ஏற்கவில்லை.

முன்னாள் சர்வதேச அணு சக்திக் கமிஷனின் தலைவரும் நோபல் பரிசு வென்றவருமான முகமது எல்பராடி தலைமையில் இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கெய்ரோவின் தகிரீர் மைதானத்தில் குழுமியுள்ளனர்.

இந் நிலையில் ராணுவத்தினருக்கும் ஜனநாயக உரிமை கோரும் அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே நாளை அந்த நாட்டில் தேர்தலை நடத்தவுள்ளது ராணுவம். இதனால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

English summary
Streets in Egypt were tense today as the country braced for its first vote since a popular revolt deposed former leader Hosni Mubarak. Tomorrow's election, that has been clouded by violence, demonstration and confrontation between the ruling military and pro-democracy protesters, will be the first step in a transfer to civilian rule, promised by the ruling army council that replaced Mubarak. A confrontation loomed large between the ruling military and pro-democracy protesters, with Field Marshal Hussein Tantawi warning the thousands camped at the Tahrir Square that no one will be allowed to pressurise the Army.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X