For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குறைந்தபட்ச மின்கட்டணத்தை ரூ. 40லிருந்து ரூ. 110 ஆக உயர்த்த முடிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Power Grid
சென்னை: தற்போது அமலில் உள்ள குறைந்தபட்ச மின் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்த தமிழக மின்வாரியம் தீர்மானித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

மின் கட்டணத்தை உயர்த்துமாறு முதல்வர் ஜெயலலிதா, தமிழக மின்வாரியத்திற்குப் பரி்ந்துரைத்துள்ளார். இதையடுத்து உத்தேச மின் கட்டண உயர்வை வெளியிட்டுள்ள மின்சார ஒழுங்கு முறை ஆணையம், டிசம்பர் 31ம் தேதிக்குள் இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது குறைந்தபட்ச மின் கட்டணத்தையும் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது ஆணையம். அதன்படி தற்போது வீடுகள், தொழிற்சாலைகளில் வசூலிக்கப்படும் குறைந்தபட்ச கட்டாய மின் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்படவுள்ளது.

தற்போது வீடுகளுக்கு,இரு மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் ரூ. 40 வசூலிக்கப்படும். மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோமோ, இல்லையோ இந்தக் கட்டணத்தை செலுத்தியாக வேண்டும்.

பெரும்பாலும் வீடு பூட்டியிருந்தால், வெளியூர்களுக்குப் போயிருந்தால் இந்த குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும். இதை தற்போது ரூ. 110 ஆக உயர்த்தவுள்ளனர்.

இதேபோல தொழிற்சாலைகளுக்கும் குறைந்தபட்ச மின் கட்டணம் இரண்டு மடங்காக உயருகிறது.

English summary
Tamil Nadu Electricity board is set to double the minimum charge for houses and industries. The new tariff may come into effect from April next year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X