For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 95வது இடம்!!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Money
டெல்லி: உலக அளவில் ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் இந்தியா 95 இடத்தை பிடித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானை விட இது பரவாயில்லை ரகம் என்றாலும் சீனாவிட நமது நாடு ஊழலில் மோசமாக உள்ளது.

ஊழலுக்கு எதிராக சர்வதேச அளவில் போராடி வரும் டிரான்பரன்சி இண்டர்நேசனல் என்ற சர்வதேச அமைப்பு, ஊழல்குறைந்த நாடுகள் குறித்த கருத்துக்கணிப்பை சமீபத்தில் நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து முதலிடம்

183 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், கரெப்ஷன் பெர்செப்சன் இண்டெக்ஸ் மதிப்பெண்கள் முறையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, சர்வதேச அளவில் ஊழல் குறைந்த நாடாக நியூசிலாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நாடு 9.5 சதவிகித மதிப்பெண்களை பெற்றுள்ளது.

இந்தியா 95:

இதனைத் தொடர்ந்து மற்ற இடங்களில் டென்மார்க், பின்லாந்து, சுவீடன், சிங்கப்பூர், நார்வே, நெதர்லாந்து ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து , கனடா உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. இதில், 8வது இடத்தை ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன. மொத்தமுள்ள 183 நாடுகளில், மூ்னறில் 2 பங்கு நாடுகள் 5 சதவீதத்திற்கு குறைவான கரெப்ஷன் பெர்செப்சன் இண்டெக்ஸ் மதிப்பெண்ணை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

இந்தியா 3.1 கரெப்ஷன் பெர்செப்சன் இண்டெக்ஸ் மதிப்பெண்களுடன் 95வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் சீனா 75வது இடத்திலும், பாகிஸ்தான், 134 இடத்தில் உள்ளது

பின்னுக்கு தள்ளப்பட்ட ஆஸ்திரேலியா:

கடந்தாண்டு வெளியான ஊழல்குறைந்த நாடுகள் பட்டியலில், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, தற்போது 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டியலின் இறுதியில் உள்ள சோமாலியா நாடு, வடகொரியா போன்ற நாடுகள் 1 சதவீத கரெப்ஷன் பெர்செப்சன் இண்டெக்ஸ் மதிப்பெண்‌ணை பெற்று மிகமோசமான இடத்தை பிடித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
The latest Transparency International corruption index is out and predictably India has slipped lower on the list. India is now ranked 95th on the list - worse than China, but better than Pakistan that's ranked way below at 134th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X