For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழலில் தொடர்புடைய சிதம்பரம் பதவி விலக பாஜக எம்.பிக்கள் முழக்கம் – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Parliament
டெல்லி: 2ஜி ஊழல் புகாரில் தொடர்புடைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கக்கூடாது என்று கூறி பாஜக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்க மிட்டதால் இரு அவைகளும் பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை இன்று கூடியதும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புள்ள மத்திய அமைச்சர் சிதம்பரத்தை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தினர்.

ஊழலில் தொடர்புடைய சிதம்பரம் அவை நடவடிக்கையில் பங்கேற்க கூடாது என்று அவையின் நடுவில் இறங்கி கூச்சலிட்டனர். அவைத்தலைவர் கேட்டுக் கொண்டும் எதிர்கட்சிகள் மறுத்து விட்டதால் மக்களவை பிற்பகல் இரண்டு மணிவரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவையிலும் சிதம்பரம் பதவி விலக வலியுறுத்தி எதிர்கட்சிகள் முழக்க மிட்டனர். அவைத்தலைவர் அமைதி காக்க வலியுறுத்தியும் எதிர்கட்சி எம்பிக்கள் கேட்க மறுத்து சபையின் நடுவில் இறங்கி கூச்சலிட்டனர்.

இதனால் அவை அலுவல்களை நடத்த முடியாது போகவே பிற்பகல் இரண்டு மணிவரைக்கும் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே சில்லறை வணிக்கத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்துநாட்கள் அவை முடங்கிய நிலையில் சிதம்பரம் விவகாரத்தை எதிர்கட்சியினர் கையில் எடுத்து அவையை முடக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Both the houses of Parliament was adjourned after BJP MPs raised slogans against Home Minister P.chidambaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X