For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசதிக்காக யுஏஇ எக்ஸ்சேஞ்சுடன் மெர்க்கன்டைல் வங்கி ஒப்பந்தம்

Google Oneindia Tamil News

Tamilnadu Mercantile Bank Logo
தூத்துக்குடி: அயல்நாடு வாழ் இந்தியர்களுக்காக மெர்க்கன்டைல் வங்கி யூஏஇ எக்சேஞ்சுடன் புரிந்துணர்வு ஓப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வணிக வளர்ச்சி துறை பொது மேலாளர் செல்வன் ராஜதுரை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி யூஏஇ எக்சேஞ்சுடன் மற்றும் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து எக்ஸ்பிரஸ் மணி சர்வீஸ் வசதியை வங்கியில் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஓப்பந்தத்தில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெகநாதன், மற்றும் யூஏஇ எக்சேஞ் மற்றும் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி ஜார்ஜ் ஆன்டனி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மணி டிரான்ஸ்பர்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் 100க்கும் மேற்பட்ட அயல்நாடுகளில் மிக முக்கியமாக இந்தியர்கள் வாழும் 10 அயல் நாடுகளான கத்தார், சவுதி அரேபியா, ஓமன், நியூசிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, யுனிடேட் அரேப் எமரேட்ஸ், இங்கிலாந்து, கனடா மற்றும் குவைத் நாடுகளில் இருந்து (என்ஆர்ஐ) மக்கள் நமது நாட்டிற்கு அனுப்பும் பணத்தை உடனடியாக பெறும் வசதியை வங்கியின் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள பெற்று பயணடைய முடியும்.

இவ்வங்கி மே 2005 முதல் இதே சேவையை வெஸ்டர்ன் யூனியன் பைனான்சியல் சர்விஸ் என்னும் மற்றொரு நிறுவனத்துடன் சேர்ந்து தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu mercantile bank has inked a MOU with UAE Exchange for the sake of NRIs living in 100 countries, in particular, 10 gulf nations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X