For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை நாங்களே நிர்ணயிப்போம்- சுப்ரீம் கோர்ட்டில் கேரளா மனு

Google Oneindia Tamil News

Supreme Court
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் எவ்வளவு நீரை தேக்கி வைப்பது என்பதை கேரள அரசே நிர்ணயிக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று

கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

இதுதொடர்பாக கேரளஅரசு சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனு:

முல்லைப்பெரியாறு அணை மிகவும் பழுதான நிலையில் இருக்கிறது. அந்த அணையில் பல இடங்களில் நீர்கசிவு அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் புதிய அணை கட்ட வேண்டியது அவசியமாகிறது.

அணை இருக்கும் பகுதியில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. 6 ரிக்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டால், அணை நிச்சயம் பாதிக்கப்படும் என்று ஐ.ஐ.டி. நிபுணர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதில் 136 அடி வரை தண்ணீரை தேக்குவது ஆபத்தானது. எனவே அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க தமிழக அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இதற்கு தமிழக அரசு மறுத்தால், அணையின் நீர்மட்டத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கேரளாவின் அணை பாதுகாப்பு கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Kerala govt has filed a new petition with the SC yesterday. It has said in its petition that SC should permit the Govt of Kerala to fix the water level in the dam since it is aged and insecure.
 We will fixt the water lever in Mullaiperiyar dam: Kerala govt to SC
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X