For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேளாங்கண்ணியில் மலையாளிகளைத் தாக்கப் போவதாக தகவல்- பாதுகாப்பு அதிகரிப்பு

Google Oneindia Tamil News

Velankanni
வேளாங்கண்ணி: நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வரும் கேரள சுற்றுலாப் பயணிகளை தாக்க சிலர் திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் போடப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் எதிரொலி தமிழகத்திலும் கிளம்பியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கேரளாக்காரர்கள் நடத்தும் கடைகள், நகைக் கடைகள், நிறுவனங்கள் தாக்குதலுக்குள்ளாகின.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளத்தினர் நடத்தும் நகைக்கடைகள், வணிக நிறுவனங்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளைத் தாக்க சிலர் திட்டமிட்டுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணியில் மலையாளிகள் நடத்தும் கடைகள், லாட்ஜ் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள், சர்ச்சுக்கு வரும் பக்தர்கள் மத்தியிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

English summary
Security has been beefed up in Velankanni. Police have recieved an information that some groups are planning to attack the tourists from Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X