For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு காய்கறிகளுடன் போன 3 வாகனங்கள் சிறைபிடிப்பு

Google Oneindia Tamil News

பொள்ளாச்சி: பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு காய்கறிகளை ஏற்றிச் சென்ற 3 சரக்கு வாகனங்களை கேரளாவில் சிறை பிடித்துள்ளனர். அந்த வாகனங்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. இதையடுத்து பொள்ளாச்சியிலிருந்து எந்த சரக்கு வாகனமும் கேரளாவுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கேரளாவுக்குப் போகும் தமிழக வாகனங்களை தொடர்ந்து அங்குள்ள விஷமிகள் தாக்கி வருகின்றனர்.இதற்குப் பதிலடியாக தமிழகத்திலும் கேரள வாகனங்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தையொட்டியுள்ள கேரள எல்லையில்தான் இதுவரை பிரச்சினை இருந்து வந்தது. தற்போது பொள்ளாச்சியிலிருந்து போன வாகனங்களுக்கும் கேரளாவில் சிக்கல் எழுந்துள்ளது.

பொள்ளாச்சியிலிருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு 3 சரக்கு மினி ஆட்டோக்கள் கேரளாவுக்குச் சென்றன. அங்கு அந்த ஆட்டோக்களை விஷமிகள் சிறை பிடித்துக் கொண்டு சென்றனர்.அந்த ஆட்டோக்களின் டிரைவர்கள் அங்கிருந்து தப்பி வந்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட ஆட்டோக்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. அவை எரிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து பொள்ளாச்சியிலிருந்து எந்த சரக்கு வாகனத்தையும் கேரளாவுக்கு அனுப்புவதில்லை என்று சரக்கு வாகன உரிமையாளர்கள் தீர்மானித்து அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் டிஎஸ்பியை நேரில் சந்தித்து தங்களது வாகனங்களை மீட்டுத் தருமாறும், பாதுகாப்பு அளிக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் மலையாள நாளிதழ் தீவைத்து எரிப்பு

இதற்கிடையே, கோவையில் மலையாள நாளிதழை தீவைத்து எரிக்கும் போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டனர். மேலும் கோர்ட் வளாகத்தி்ல் உள்ள ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த மலையாள எழுத்துக்களை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தனர்.

உடுமலையில் மினி ஆட்டோக்கள் ஸ்டிரைக்

கேரள அரசைக் கண்டித்து உடுமலையில், மினி ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று ஆட்டோக்களை ஓட்டாமல் ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.

English summary
Miscreants have captured 3 good autos in kerala, coming from Pollachi with vegetables. Auto drivers and owners have given a complaint with Pollachi DSP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X