For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வெப்சைட் தொடங்கிய கேரள மலையாளிகள்

Google Oneindia Tamil News

நெல்லை: முல்லை பெரியாறு பிரச்சனையால் இரு மாநிலங்களிலும் எழுந்துள்ள பதற்றத்தை அடுத்து தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாப்பது என்ற பெயரில் சப்போர்ட் கேரளா என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகள் தங்கள் பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டால் தக்க நேரத்தில் பாதுகாப்பு உதவிகள் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்தும், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் கண்டனம் தெரிவித்தும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இன்று 15வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கோவை, கும்பகோணம், சென்னை ஆகிய இடங்களில் மலையாளிகள் நடத்தும் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. நெல்லை, ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் கேரளத்தினர் நடத்தும் கடைகளில் தமிழர் அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு இணையதளம்

இதனால் தமிழகத்தில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அங்குள்ள அமைப்புகளிடம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சப்போர்ட் கேரளா என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வாழும் மலையாளிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மலையாளியின் பெயர், வயது, பாலினம், தொழில், போன் எண், இமெயில் முகவரி, கேரளாவில் உள்ள உறவினர்கள் பெயர், முகவரி, போன் எண், தமிழக உறவினர்களின் பெயர், முகவரி, போன் எண், கேரளாவில் உள்ள நெருங்கிய நண்பர்களின் போன் எண், பெயர், முகவரி, இமெயில் முகவரி, தமிழகத்தில் உள்ள நெருங்கிய நண்பர்களின் போன் எண், பெயர், முகவரி, இமெயில் முகவரி போன்றவை பதிவு செய்ய வேண்டும் என்று அந்த இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் கேரளாவில் உள்ள வீட்டு முகவரி, போன் எண், குடும்பத்தினர் பெயர், மற்றும் முகவரி, முதலில் எச்சரிக்கை செய்ய வேண்டியவர்கள் பெயர், முகவரி, போன் எண் ஆகிய விபரங்கள் கோரப்பட்டுள்ளன. இதை ஆன்லைனில் பதிவு செய்யும்படி அதில் கூறப்பட்டுள்ளதாம்.

English summary
Malayalees in Kerala have launched a website to assist Malayalees residing in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X