For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. தலைமையில் இன்று கிறிஸ்துமஸ் விழா- 'அனைத்து' எம்.எல்.ஏக்களும் பங்கேற்க உத்தரவு!

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: சசிகலா குருப்புக்கு அதிமுக எம்.எல்.ஏக்களிடையே எந்தப் பலமும் இல்லை என்பதை உலகுக்குக் காட்டுவதற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

சசிகலாவுடனான 29 வருட கால நட்பை நேற்று துண்டித்துக் கொண்டார் ஜெயலலிதா. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை நேற்று பூண்டோடு அதிமுகவிலிருந்து நீக்கினார்.

இந்த நிலையில் இன்று ஜெயலலிதா தலைமையில் சென்னையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது. இதில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் பங்கேற்க வேண்டும் என கட்சித் தலைமையிலிருந்து உத்தரவு போயுள்ளதாம்.

இதற்கு ஒரு முக்கியக் காரணம் கூறப்படுகிறது. சசிகலா பக்கம் யாரும் இல்லை என்பதை அனைவருக்கும் பகிரங்கமாக காட்டுவதற்காக இந்தஉத்தரவு போயுள்ளதாம். அதேபோல எம்.எல்.ஏக்கள் தவிர அமைச்சர்களும் இன்றைய விழாவில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

மேலும் மாநில அளவிலான நிர்வாகிகளும் கூட விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனராம். கிட்டத்தட்ட சட்டசபையில் நிறைவேற்றப்படும் நம்பிக்கைத் தீர்மானம் போல இன்றைய கிறிஸ்துமஸ் விழாவை அதிமுக தலைமை மாற்றியிருப்பதாக கூறுகிறார்கள்.

English summary
ADMK high command has ordered all part MLAs to attend Jaya led Christmas function in Chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X