For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை விப்ரோ நிறுவனத்தில் பயங்கர தீ-பல ஆயிரம் ஊழியர்கள் வெளியேற்றம்

Google Oneindia Tamil News

Wipro Logo
சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து பல ஆயிரம் ஊழியர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த தீவிபத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

சென்னை சோழிங்கநல்லூரில் விப்ரோ நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு வளாகம் உள்ளது. இங்கு 7 மாடிக் கட்டட வளாகத்தில் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பல ஆயிரம் பேர் இங்கு பணியாற்றுகின்றனர்.

இந்த கட்டடத்தின் 2 மற்றும் 3வது தளங்களில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அபாய மணி ஒலித்தது. தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தளங்களுக்குள் செல்ல முடியாததாலும், புகை மூட்டம் அதிகமாக இருந்ததாலும் கண்ணாடிகளை உடைத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. தீயணைப்பு் படையினருடன் விப்ரோ ஊழியர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

English summary
Fire mishap forced Wipro office to evict its thousands of staffs in its Chennai Sholinganallur office campust today. No one was injured in the mishap.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X