For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மியான்மரில் கட்சியைப் பதிவு செய்த உடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார் ஆங் சாங் சூகி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

முதல் முறையாக பர்மிய நாடாளுமன்றத்தில் நுழைந்த ஆங் சாங் சூகி!

மியான்மரில் கட்சியைப் பதிவு செய்த உடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார் ஆங் சாங் சூகி

நோபிடா:

ஜனநாயக தேசிய லீக் கட்சித் தலைவர் ஆங்சான் சூகி நோபிடாவில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று தனது கட்சியை பதிவு செய்தார். இதன்பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குள் சென்று அனைவரையும் சந்தித்து உரையாடினார்.

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்திற்காக போராடி வருபவர் ஆங்சான் சூகி. இதற்காக தனது இளமைக்காலம் முழுவதையும் வீட்டுக்காவலில் கழித்தார். கடந்த 20 ஆண்டுகளில் பெரும்பாலான நாட்கள், வீட்டுச்சிறையில் இருந்த அவர், கடந்த ஆண்டு நவம்பரில் மியான்மரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், அந்த தேர்தலை புறக்கணித்ததற்காக, அவரது ஜனநாயக தேசிய லீக்' கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த சூகி

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி. ஆவதற்கு ஆங்சான் சூகி திட்டமிட்டுள்ளார். இதற்கான முன்னோட்டமாக வெள்ளிக்கிழமையன்று தலைநகர் நேபிடாவுக்கு சென்ற சூகி, தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தனது கட்சியை மீண்டும் முறைப்படி பதிவு செய்து கொண்டார். இதனையடுத்து முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் சென்றார். அங்கு சபாநாயகர் ஷ்வே மான், மேல்-சபை சபாநாயகர் கின் ஆங் மின்ட் ஆகியோரை அவர் சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடினார்.

English summary
Burma's pro-democracy leader Aung San Suu Kyi has officially registered her National League for Democracy (NLD) party and visited parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X