For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். ஒளிபரப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா: அழுதபடியே பிரதமரிடம் கடிதம் கொடுத்தார்

By Siva
Google Oneindia Tamil News

கராச்சி: பாகிஸ்தான் தகவல் அமைச்சர் பிர்தௌஸ் ஆஷிக் அவான் எந்தவித காரணமும் கூறாமல் திடீர் என்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டம் இன்று கராச்சியில் நடந்தது. அந்த கூட்டம் அரசு தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பராப்பானது. இதில் கலந்து கொண்ட அந்நாட்டு தகவல் அமைச்சர் பிர்தௌஸ் ஆஷிக் அவான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

பிரதமர் கிலானியிடம் அவான் கூறியதாவது,

அமைச்சரவை உறுப்பினராக தொடர்ந்து இருக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. உங்கள் அனுமதியுடன் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறி அழுதுவிட்டார். தனது இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று அவர் தெரிவிக்கவில்லை.

கடந்த 2008ம் ஆண்டு சர்தாரி அரசு பதவிக்கு வந்த பிறகு பொறுப்பேற்ற 3வது தகவல் அமைச்சர் அவான் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முன்பு ஷெர்ரி ரஹ்மான்(தற்போது அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர்) மற்றும் குவாமர் ஜமான் கைரா ஆகியோர் தகவல் அமைச்சர்களாக இருந்தனர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு பிரச்சனை ஏற்பட்டபோதெல்லாம் அதற்கு பேராதரவு அளித்து வந்த அவான் கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சரவை மாற்றித்தின்போது அமைச்சரானார்.

English summary
Pakistan's information minister Firdhous Ashiq Awan has resigned her post today in a federal cabinet meeting held in Karachi. She resigned before PM Gilani and broke down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X