For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரைக்குடி விழாவில் ப.சிதம்பரம் பெயர் ஆப்சென்ட்- அவரே நீக்கச் சொன்னாரா?

Google Oneindia Tamil News

P Chidambaram
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று பங்கேற்ற நிகழ்ச்சியின் அழைப்பிதழில் தொகுதி எம்.பியான மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயர் இடம் பெறவில்லை. அதேசமயம் தொகுதி எம்.எல்.ஏவின் பெயர் மட்டும் இடம் பெற்றிருந்தது.

இருப்பினும் பிரதமரின் தமிழக வருகைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து தனது பெயர் அழைப்பிதழில் இடம் பெற வேண்டாம் என்று ப.சிதம்பரமே கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காரைக்குடியில் உள்ள டாக்டர் அழகப்பா பல்கலைக்கழகத்தில், ராமானுசன் உயர் கணித மையத் திறப்பு விழா இன்று நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்து தொடக்க உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், மத்திய திட்டக் குழு உறுப்பினர் கஸ்தூரி ரங்கன், யுஜிசி தலைவர் வேத் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா அழைப்பிதழில் இவர்கள் பெயர் தவிர காரைக்குடி எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமியின் பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்தது. காரைக்குடி சட்டசபைத் தொகுதியை உள்ளடக்கிய சிவகங்கை லோக்சபா தொகுதியின் உறுப்பினரான மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பெயர் அழைப்பிதழில் இடம் பெறவில்லை.

இதனால் சர்ச்சை எழுந்தது. விழாவுக்கு ப.சிதம்பரமும் வந்திருந்தார். அவர் விழா மேடையில் அமரவில்லை. மாறாக பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து விழாவில் பங்கேற்றார்.

விழா அழைப்பிதழில் ப.சிதம்பரம் பெயர் இடம் பெறாமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அவரே பெயர் இடம் பெற வேண்டாம் என்று சொன்னாரா அல்லது தவறுதலாக விடுபட்டு விட்டதா என்பது தெரியவில்லை.

English summary
Union Home Minister P.Chidambaram's name was missing from Karaikudi Azhagappa universtity function which was attended by PM Manmohan SIngh today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X