For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2012ம் ஆண்டு கணித ஆண்டாக அனுசரிக்கப்படும்– கணிதமேதை ராமனுஜர் பிறந்தநாள் விழாவில் பிரதமர் அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Manmohan Sing
சென்னை: கணித மேஜை ராமானுஜம் பிறந்த டிசம்பர் 22 ம் தேதி தேசிய கணிதநாளாக கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ராமானுஜத்தின் 125 வது பிறந்த நாளை ஒட்டி 2012 ம் ஆண்டை கணித ஆண்டாக அனுசரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கணித மேதை ராமானுஜத்தின் 125 வது பிறந்தநாள் விழா சென்னை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ராமானுஜத்தின் கணித புலமைகள் வியக்கத்தவை என்று தெரிவித்தார். உலகம் போற்றும் அந்த கணித மேதையை சிறப்பிக்கும் வகையில் இனி அவரது பிறந்தநாளான டிசம்பர் 22ம் நாள் தேசிய கணித நாளாக கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

2012 ம் ஆண்டு கணித ஆண்டு

ராமனுஜத்தின் 125 வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக 2012 ம் ஆண்டு கணித ஆண்டாக அனுசரிக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். முன்னதாக அவர், கணித மேதை ராமானுஜத்தின் அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறையை வெளியிட்டார். ராமானுஜம் எழுதிய கணித நூல்களின் புதிய பதிப்புகளையும் பிரதமர் வெளியிட்டார். ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றினை எழுதிய ராபர்ட் காளிக்கலுக்கு சிறப்பு கவுரவம் விழாவில் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டது.

காரைக்குடி பயணம்

பிரதமர் மன்மோகன்சிங் சென்னை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, தனி விமானத்தில் திருச்சி செல்கிறார். திருச்சி விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடி செல்கிறார். அங்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கணிதமேதை ராமானுஜம் உயர் கணித மையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் காரைக்குடி மானகிரியில் வாசன் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். காரைக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டரில் பிரதமர் திருச்சி விமானநிலையம் வருகிறார். அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். பிரமருக்கு யாரும் கறுப்புக்கொடி காட்டிவிடாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

English summary
Prime Minister Manmohan Singh declares year 2012 as "National Mathematical Year" to mark 125th birth anniversary of mathematical genius S Ramanujan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X