For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

28ல் கூடும் சேலம் பாமக பொதுக்குழு: முல்லைப் பெரியாறு குறித்து ஆலோசனை

Google Oneindia Tamil News

சேலம்: பாமகவின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பொதுக் குழு கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.

பாமகவின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பொதுக் குழு கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம், கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம், பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகின்றது.

மேலும், சேலத்தில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பலர் பாமகவை விட்டு வெளியேறியது குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதிக்க திமுகவும் பொதுக்குழுவைக் கூட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டக் கூடாது என்று கேரள அரசை வலி்யுறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss has convened Salem district PMK general council on december 28. It is expected they will discuss about Mullai Periyar issue, Kudankulam row, milk price, bus fare hike and so on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X