For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யானைக்கு திரைபோட்டீங்க, அடுத்து என்ன லாந்தர் விளக்குகளை உடைப்பீங்களா? லாலு நக்கல்

By Siva
Google Oneindia Tamil News

பாட்னா: உத்தர பிரதேசத்தில் இருக்கும் யானை சிலைகளுக்கு திரை போட்டீர்கள், அடுத்து லாந்தர் விளக்குகளை உடைப்பீர்களா என்று ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தேர்தல் ஆணையத்தை கேட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள ஆளும் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலைகளையும், அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மாயாவதியின் சிலைகளையும் துணியைபோட்டு மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி ரூ.1 கோடி செலவில் அனைத்து சிலைகளும் துணியால் மூடப்பட்டுள்ளன.

இது குறித்து லாலு பிரசாத் யாதவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,

துணியைப் போட்டு சிலைகளை மூடுவது வீண் வேலை. சரி சிலைகளை துணியைப் போட்டு மூடிவிட்டீர்கள், அடுத்து எனது கட்சியின் சின்னமான லாந்தர் விளக்குகளை எல்லாம் உடைக்கப் போகிறீர்களா என்ன? காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தையும், சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தையும் என்ன செய்வீர்கள். ஒரு கட்சியின் சின்னத்தை திரைபோட்டு மூடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

மத்திய அமைச்சர் பவாரைத் தாக்கி, யோகா குரு ராம்தேவ் முகத்தில் கருப்பு மையை தெளித்து சிலர் விளம்பரம் தேடுகின்றனர் என்றார்.

English summary
Rashtriya Janata Dal (RJD) supremo Lalu Prasad Yadav has asked election commission whether it is going to break all lanterns as it is his party symbol. He is wondering as to how would the EC will cover Congress(hand) and SP(cycle) symbols.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X