For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தை மையமாக வைத்து அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

2012 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்தது. விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு எத்தனை சதவீதம் அகவிலைப்படி

வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு 7 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில்

இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்த அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்படும். அடிப்படை ஊதியம், கிரேடு சம்பளம் ஆகியவற்றில் ஏற்கனவே 58 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் மத்திய அரசு

ஊழியர்கள் தற்போது உயரும் 7 சதவீதத்துடன் இனி 65 சதவீதம் பெறுவார்கள்.

கடந்த 1.7.2011-ல் 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் இந்த முறையும் 7 சதவீதம் உயர்த்தப்படுகிறது. 2006-ம் ஆண்டு வழங்கப்பட்ட 6-வது ஊதியக்குழுவிற்கு பிறகு

அகவிலைப்படி இதுவரை 11 முறபை உயர்த்தப்பட்டுள்ளது.

English summary
Union Govt hiked the dearness allowance of its employees up to 7 percent and sent the draft for Cabinet approval.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X