For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்த் நீக்கத்திற்கு எதிர்ப்பு-கருப்புச் சட்டசபையில் சட்டசபைக்கு வந்த தேமுதிக எம்எல்ஏக்கள்

Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பத்து நாட்கள் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் இன்று கருப்புச் சட்டை அணிந்து சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சட்டசபையின் மாண்பையும், மரபையும் குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி விஜயகாந்த்துக்கு 10 நாள் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவரால் 10 நாட்கள் சபைக்கு வர முடியாது.

இதற்கு கடும் எதி்ர்ப்பு தெரிவித்து நேற்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தேமுதிக உறுப்பினர்கள் அவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.அனைவரும் விஜயகாந்த் மீதான நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

English summary
DMDK members attended the assembly session in black shirts to condemn the action against thier party leader Vijayakanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X