For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

23 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டது தூத்துக்குடி துறைமுகம்!

Google Oneindia Tamil News

Tuticorin Port
தூத்துக்குடி : தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 23 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளதுதாக துறைமுக தலைவர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு 2011 - 2012 ம் நிதியாண்டில் 23 மில்லியன், இலக்கினை கடந்த பிப்ரவரி மாதம் 3 ம் தேதி 230.66 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்தது. சென்ற ஆண்டை ஒப்பிடும் போது இது 13.87 விழுக்காடு வளர்ச்சியாகும்.

கடந்த 2010 - 2011ல் இதே காலகட்டத்தில் இத் துறைமுகம் 202.56 லட்சம் டன் சரக்குகளை கையாண்டிருந்தது. வ.உ.சிதம்பரனார் துறை முகம் பிப்ரவரி 4 ம் தேதியன்று 400, 723 டி.ஈ.யுக்களை கையாண்டு நடப்பு நிதியாண்டில் 4 லட்சம் டி.ஈ.யு இலக்கினை கடந்துள்ளது.

இந்த 23 மில்லியன் டன்களில், அதிக அளவில் விவசாயத்திற்கான உரம், உரம் தயாரிப்பதற்கான தாதுப்பொருட்கள், அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரி, சரக்குப் பெட்டகங்களில் அனுப்பப்படும் பொருட்கள், எந்திர உதிரி பாகங்கள், இரும்பு மற்றும் எஃகு பொருட்கள், சுண்ணாம்புக்கல், ஜிப்சம், பாமாயில், திரவப் பெட்ரோலிய பொருட்கள் ஆகியவை இறக்குமதியில் அடங்கும்.

ஏற்றுமதி பொருட்களில் மக்காச்சோளம், கிரானைட் கற்கள், சீனி, கட்டிட பொருட்கள் போன்றவை அடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,.

இந்த சாதனை படைத்ததற்கு காரணமாக இருந்த உபயோகிப்பாளர்கள், துறைமுக பொறுப்புக்கழக உறுப்பினர்கள், சரக்கு பெட்டக முனையத்தை நடத்துவோர், துறைமுக அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

English summary
Tuticorin Port has handled 23 million tonnes of cargo. Its a new record, said, head of port in the statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X