For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டமன்றத்தில் 'ஆக்ஷன்' செய்வது,வசனம் பேசுவது கூடவே கூடாது-ராமதாஸ்

Google Oneindia Tamil News

Dr Ramadoss
விழுப்புரம்: சட்டமன்றம் என்பது ஆக்கப்பூர்வமான யோசனைகளை அரசுக்குச் சொல்லும் இடம். அங்கு போய் ஆக்ஷன் செய்வது, வசனம் பேசுவது கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சகிப்பு தன்மையும் பொறுமையும் வேண்டும். அதைவிட எதிர்கட்சி உறுப்பினர்கள் சகிப்பு தன்மையும் பொறுமையும் அதிகம் இருக்க வேண்டும்.

ஸ்டூடியோவில் ஆக்ஷன் செய்வது, வசனம் பேசுவது போல் சட்டமன்றத்தில் பேசக் கூடாது. ஆக்கப்பூர்வமான யோசனைகளை சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் சொல்ல வேண்டும்.

ஆளுங்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஒரு வீடு கட்ட ரூ.1 லட்சம் போதாது. கடலூரை விட விழுப்புரம் மாவட்டத்தில் குடிசை வீடுகள் அதிகம் உள்ளன. எனவே 2 மாவட்டங்களிலும் 1 லட்சம் வீடுகளை விட கூடுதலாக கான்கிரீட் வீடுகளை கட்டி குடிசை இல்லாத மாவட்டங்களாக்க வேண்டும் என்றார் அவர்.

English summary
PMK founder Dr Ramadoss has said that Cinematic actions, delivering dialogues are condemnable one in the Assembly. He also advised the ruling party to hear the voices of opposition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X