For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரத்து குறைவு: ஓரேயடியாக உயர்ந்த முருங்கைக்காய் விலை

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வரத்து குறைவால் சென்னையில் முருங்கைக்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு முருங்கைக்காய் ரூ.10க்கு விற்பனையாகின்றது.

தானே புயலால் சென்னை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் உள்ள ஏராளமான முருங்கை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் கடந்த 1 மாத காலமாக முருங்கைக்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வரத்து குறைவால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் ஒரு முருங்கைக்காய் ரூ.10க்கு விற்பனையாகிறது. கோயம்பேட்டில் 1 கிலோ முருங்கைக்காய் ரூ.75க்கும், சில்லறை வியாபாரக் கடைகளில் ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் இன்றைய விலை விவரம் (கிலோவுக்கு),

கத்தரிக்காய் - ரூ.20

தக்காளி - ரூ.20

வெண்டைக்காய் - ரூ.30

பாகற்காய் - ரூ.24

புடலங்காய் - ரூ.20

கேரட் - ரூ.30

பீட்ரூட் - ரூ.20

சேனை - ரூ.20

முட்டைக்கோஸ் - ரூ.10

முள்ளங்கி - ரூ.15

அவரைக்காய் - ரூ.20

புதினா கட்டு -ரூ. 3

கறிவேப்பிலை, கொத்தமல்லி -ரூ. 4

பச்சை மிளகாய் - ரூ.20

பூசணிக்காய் - ரூ.10

கோவக்காய் - ரூ.25

கொத்தவரங்காய் - ரூ.25

வெங்காயம் - ரூ.10

சிறிய வெங்காயம் - ரூ.20

English summary
Drumstick price has increased sharply due to high demand and less availability. A drumstick costs Rs.10 while a kilo costs Rs.75 in Koyambedu and Rs.100 in retail shops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X