For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐரோப்பா: 27 ஆண்டுகள் கழித்து ரோமில் பனிப்பொழிவு- குளிருக்கு 300 பேர் பலி

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிரும், பனிப்பொழிவும் நிலவுதால் இதுவரை இதுவரை 300 பேர் பலியாகியுள்ளனர். ரோம் நகரில் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

எப்படி நம்மூரில் மழை, வெள்ளம் ஆட்டிப் படைக்குமோ அதேபோல மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிரும், பனிப்பொழிவும் மக்களை வாட்டி வதைக்கும்.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. கடந்த வாரம் முழுவதும் ஆட்டிப்படைத்த பனிப்பொழிவு இந்த வாரமும் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

நேற்று வரை பனிப்பொழிவுக்கு உக்ரைன், போலந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 297 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 300க உயர்ந்துள்ளது.

ரோமில் கடந்த 1985ம் ஆண்டிற்குப் பிறகு தற்போது தான் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்திலும் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்ப்டும் கிட்டத்தட்ட பாதி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பனிப்பொழிவுக்கு உக்ரைனில் மட்டும் 131 பேர் பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் பலர் வீடு இல்லாதவர்கள். மேலும் 1,800 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று போலந்திலும் குளிருக்கு 53 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் நெதர்லாந்தில் கடந்த 27 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தட்பவெட்பநிலை குறைந்துள்ளது. அல்ஜீரியாவிலும் குளிருக்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்.

இது தவிர செர்பியா மற்றும் ரோமானியாவிலும் நிலைமை மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Intense cold wave in Europe has claimed 300 lives so far. Rome has experienced snowfall after 27 years. Britain is also reeling under coldwave and Heathrow Airport of London has cancelled almost half of the flights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X