For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலைப் புறக்கணிக்க வலியுறுத்தி சங்கரன்கோவிலில் போஸ்டர்-பரபரப்பு

Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியை சுழற்சி முறையில் பொது தொகுதியாக மாற்றும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக முக்குலத்தோர் ஒருங்கிணைப்பு விழிப்புணர்வு இயக்கத்தினரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சங்கரன்கோவிலில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு அதிமுக சார்பி்ல நகராட்சித் தலைவர் முத்துச்செல்வி போட்டியிடுகிறார். திமுக சார்பில் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார். மதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் அங்கு ஒரு திடீர் போஸ்டர் முளைத்துள்ளது. முக்குலத்தோர் ஒருங்கிணைப்பு விழிப்புணர்வு இயக்கம், சங்கரன்கோவில் ஒன்றியம் என்ற பெயரில் ஒட்டபப்ட்டுள்ள இந்த போஸ்டரில், தேர்தலை புறக்கணிப்போம், ஜனநாயக உரிமையை மீட்க சுமார் 40 வருடங்களுக்கு மேலாக தனித் தொகுதியாக தொடர்ந்து வரும் சங்கரன் கோவில் தொகுதியை சுழற்சி முறையில் பொதுத் தொகுதியாக அறிவிக்கும் வரையில் தேர்தலை புறக்கணிப்போம், இவண். முக்குலத்தோர் ஒருங்கிணைப்பு விழிப்புணர்வு இயக்கம், சங்கரன்கோவில் ஒன்றியம் என்று வாசகம் உள்ளது.

ஜாதி ரீதியான பிரச்சினைகளைக் கிளப்பும் வகையில் இந்த போஸ்டர்கள் உள்ளதால் சங்கரன்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களை அகற்றும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த போஸ்டர்களை ஒட்டியது யார் என்றும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

English summary
A controversial Poster has created tension in Sankarankovil. The poster calls the Mukkulathor people to boycott the bypoll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X