For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோத்ரா கலவரம்: மெத்தனமான மோடி அரசுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம்

By Siva
Google Oneindia Tamil News

Narendra Modi
அகமதாபாத்: கோத்ரா கலவரத்தின்போது முதல்வர் நரேந்திர மோடியின் அரசு போதிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோத்ரா கலவரம் தொடர்பாக குஜராத் இஸ்லாமிய நிவாரண குழு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா மற்றும் நீதிபதி ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது,

கோத்ரா கலவரத்தின்போது மோடி அரசின் மெத்தனத்தால் மாநிலத்தில் உள்ள மத கட்டடங்கள் பல சேதப்படுத்தப்பட்டன. எனவே சேதமடைந்த 500 மத கட்டடங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அந்த இடங்களை சீரமைத்து, நிவாரணம் வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு.

கலவரத்தின்போது சேதமடைந்த வீடுகள், வர்த்தக கட்டிடங்களுக்கு நிவாரணம் வழங்கியபோதே மத கட்டடங்களுக்கும் வழங்கியிருக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களில் சேதமடைந்த மத கட்டடங்களுக்கு நிவாரணம் கோரும் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தலைமை நீதிபதி பெற்று, பரிசீலித்து முடிவு செய்வார்கள். அவர்கள் தங்கள் முடிவுகளை 6 மாதத்திற்குள் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்படும் என்றனர்.

கோத்ரா கலவரத்தின்போது சேதமைடந்த மத கட்டடங்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி குஜராத் இஸ்லாமிய நிவாரண குழு கடந்த 2003ம் ஆண்டு மனு தாக்கல் செய்தது.

English summary
Gujarat high court has condemned Modi's government for its inaction and negligence during the 2002 post-Godhra riots that led to large-scale destruction of religious structures. It has ordered the government to pay compensation to religious structures in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X