For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8700 பேரை நீக்க பெப்சி நிறுவனம் முடிவு

By Shankar
Google Oneindia Tamil News

PEPSI
நியூயார்க்: குளிர்பான தயாரிப்பு நிறுவனமான பெப்சி 8700 பேரை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.

இந் நிறுவனத்தின் 4-வது காலாண்டு முடிவை வெளியிட்ட பெப்சி நிறுவனமானது, 2012-ம் ஆண்டுக்கான திட்டமிடல்களையும் விலை குறைப்பு அறிவிப்புகளையும் தெரிவித்துள்ளது.

இதில் 8700 பேரை பணி நீக்கம் செய்வதுடன் குளிர்பான விளம்பரங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவு முடிவு செய்துள்ளதாக அதன் முதன்மை செயல் அதிகாரி இந்திரா நூயி தெரிவித்துள்ளார். இருப்பினும் அமெ

விளம்பரங்களுக்கு தற்போது செலவிடப்படும் தொகையான 500 மில்லியன் டாலரை 600 மில்லியன் டாலராக உயர்த்தவும் பெப்சி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக வட அமெரிக்கா சந்தையை இலக்கு வைத்து விளம்பரங்கள் மேற்கொள்ளப்ப்டும் என்றார் நூயி.

மேலும் தற்போதைய நிச்சயமற்ற பொருளாதார நிலை நீடிக்குமேயானால் நடப்பு 2012ஆம் ஆண்டு தமது நிறுவனத்துக்கு லாபமும் நட்டமும் இல்லாத இடைநிலை ஆண்டாக இருக்கும் என்றார் அவர்.

மற்றொரு குளிர்பான நிறுவனமான கோக், கடந்த செவ்வாய்க்கிழமையன்று விலை குறைப்பை அறிவித்திருந்த போதும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள விலை.

30 நாடுகளில் 3 லட்சம் பேர் பெப்சி நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இதில் தற்போது 3 விழுக்காடு அளவுக்கு ஆட்குறைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

English summary
PepsiCo is trying to put some fizz back into its business. The food and drinks maker announced a restructuring on Thursday that includes cutting 8,700 jobs globally and plowing money into advertising drinks like Pepsi and Mountain Dew in North America.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X