For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலுசிஸ்தான் போராளிகளை எப்படி ஒடுக்குவது?-ராஜபக்சேவிடம் அட்வைஸ் கேட்ட பாக்.!

By Mathi
Google Oneindia Tamil News

Rajapakse with Gilani
இஸ்லாமாபாத்: தனிநாடு கோரி போராடி வரும் பலுசிஸ்தானியர்களுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி பாகிஸ்தான் சென்றிருந்த ராஜபக்சேவிடம் அந்நாட்டு உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

பலுசிஸ்தான் மாகாணத்தை பாகிஸ்தான் நீண்டகாலமாக புறக்கணித்து வருகிறது என்பது குற்றச்சாட்டு. தனித் தேசிய இனமான தங்களைத் தாங்களே ஆளும் சுய நிர்ணய உரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்தப் பிராந்திய மக்கள் நீண்ட காலமாக ஆயுதம் ஏந்திப் போராடி வருகின்றனர்.

கிட்டத்தட்ட இலங்கையில் எப்படி தமிழர்களை சிங்கள அரசுகள் தொடர்ந்து ஒடுக்கி அடக்கி வருகின்றனவோ, அதேபோலத்தான் பலுசிஸ்தான் மக்களையும் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து அடக்குமுறையின் கீழ் வைத்துள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அதே ஆயுதப் போராட்டத்தைத்தான் பலுசிஸ்தானியர்களும் மேற்கொண்டுள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தை தனிநாடாக்கினால் வளைகுடா நாடுகளிலிருந்து அம்மாகாணம் வழியாக சீனாவுக்கு எண்ணெய் வளம் எடுத்துச் செல்லப்படுவது கேள்விக் குறியாகிவிடும் என்பதால் பலுசிஸ்தான் போராளிகளை கடுமையாக பாகிஸ்தான் ஒடுக்கி வருகிறது பாகிஸ்தான்.

இந்நிலையில் ராஜபக்சே, அண்மையில் பாகிஸ்தான் சென்றிருந்தார். அவ்ருடன் வெளிப்படையாக இருதரப்பு உறவுகள் குறித்து அந்நாட்டு தலைவர்கள் விவாதித்தாலும் பல ரகசிய பேச்சுகளும் நடைபெற்றதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் போர் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்கியது போல, தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது போல, தமிழ் இனத்தை கொடுமையான நிலைக்குத் தள்ளியது போல, பாகிஸ்தானில் பலுசிஸ்தானத்து போராளிகளை ஒடுக்கும் முறைகளை ராஜபக்சேவிடம் பாகிஸ்தான் தலைவர்களும் அதிகாரிகளும் கேட்டதாகவும் சர்வதேச நாடுகளை வளைத்து எப்படி புலிகளை ஒழித்தோம் என்று ராஜபக்சே ரொம்பப் பெருமையோடு வகுப்பெடுத்ததாகவும் அந்த ஊடகங்களின் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பரவாயில்லை, எதில் பெயர் வாங்குகிறாரோ இல்லையோ, இன ஒழிப்பில் ஹிட்லரை மிஞ்சி நம்பர் ஒன் தலைவராக விரைவில் உலக அளவில் ராஜபக்சே பெயரெடுத்து விடுவார் என நம்பலாம்.

English summary
A high level team of Sri Lankan officials who visited Pakistan were actually on a mission to help Pakistan combat and crush the Baloch freedom fighters or Sarmachars demanding independence from the failing state in outh Asia, said an Examiner feature by Ahmar Mustikhan on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X