For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்லைன் மூலம் பாலிசி விற்பனை: எல்.ஐ.சி. திட்டம்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: ஆன்லைன் மூலம் பாலிசி விற்கும் முறையை எல்.ஐ.சி. விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக எல்.ஐ.சி. தென் மண்டல மேலாளர் சிங் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் ரூ.63 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட எல்.ஐ.சி.யின் புதிய அலுவலர் குடியிருப்பை எல்.ஐ.சி. தென் மண்டல மேலாளர் சிங் திறந்து வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஆயுள் காப்பீட்டு கழகத்தில் விரைவில் இணையதளத்தில் பாலிசி விற்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலக நடைமுறையை முற்றிலும் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிதியாண்டில் 51 லட்சம் பாலிசிகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 31 லட்சம் பாலிசிகள் விற்கப்பட்டுள்ளன. காப்பீட்டாளர்களுக்கு 71 சதவீதம் முதிர்வு தொகை வழங்கப்பட்டுள்ளது.

காப்பீட்டாளர்களிடம் இருந்து பிரீமியம் தொகையை வசூலிக்க 20,000 முகவர்களை கொண்ட சேவை மையங்கள் செயல்படுகின்றன. பாலிசிதாரர்கள் யூனிட் பிளஸ் முதலீடு பாலிசிகளை வாங்கும் போது மிகவும் கவனத்தோடு நிபந்தனைகளை படித்த பின் தேர்ந்தெடுப்பது அவசியம்.

இப்போது நடைமுஹையில் உள்ள ஜீவன் அங்கூர் காப்பீடு பாலிசிதாரர்களை அதிகம் கவர்ந்துள்ளது. ஜீவன் ஆரோக்யா பாலிசி 3 விருதுகளை பெற்றுள்ளது என்றார்.

English summary
LIC has decided to sell its policies online. It has planned to sell 51 lakh policies in the current financial year and has already sold 31 lakh policies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X