For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலவெறி இத்தாலியர்கள் தப்பிவிட முடியாது: உம்மன்சாண்டி

Google Oneindia Tamil News

Oommen Chandy
கொல்லம்: இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுப் படுகொலை செய்த இத்தாலிய கொலைகாரர்கள் தப்பிவிட முடியாது என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இருவரை இத்தாலிய சரக்குக் கப்பலில் பயணித்தோர் சுட்டுப் படுகொலை செய்தனர்.

இது தொடர்பாக 6 இத்தாலியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இத்தாலியர்கள் கைதாவதைத் தடுக்கும் முயற்சியில் டெல்லியில் உள்ள இத்தாலிய தூதரகம் தீவிரம்காட்டி வருகிறது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களில் ஒருவரான செலஸ்டின் வாலண்டைனின் வீட்டுக்கு நேரில் சென்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, இரண்டு மீனவர் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்றார்.

மேலும் கொலைகார இத்தாலியர்களை தப்பவிடமாட்டோம் என்றும் சாண்டி தெரிவித்தார். கேரளத்தில் செலஸ்டின் குடும்பம் வசித்தாலும் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

English summary
Chief Minister Oommen Chandy on Saturday called on the family of Valentine (Jelestine) who was shot dead on sea on Wednesday by the crew of an Italian merchant vessel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X