For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொள்ளையர் தலைவனுக்கு 'பேனர்' கட்டுவதற்குள் சுட்டு வீழ்த்திய போலீஸ்!

Google Oneindia Tamil News

Vinoth Kumar
சென்னை: சென்னை வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலின் தலைவனாக செயல்பட்ட வினோத்குமாரின் உருவப் படத்தை பிளக்ஸ் போர்டு மூலம் அனைத்து வங்கிகள் முன்பும் பேனர் போல வைப்பதற்கு காவல்துறையினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள்ளாகவே அவன் சிக்கி செத்துப் போய் விட்டான்.

சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா, கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் கிளைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கும்பலைப் பிடிக்க சென்னை போலீஸார் 40 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில்தான் இன்னொரு வங்கியின் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினான் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனும், முன்னாள் பொறியியல் மாணவனுமான வினோத்குமார்.

அந்த வீடியோ பதிவில் இருந்த வினோத்குமாரின் படத்தை பிரிண்ட் போட்ட போலீஸார் நேற்றுதான் பத்திரிக்கையாளர்கள் மூலம் மக்கள் பார்வைக்கு விட்டனர். மேலும், வினோத்குமாரின் படத்தை பிளக்ஸ் போர்டு மற்றும் டிஜிட்டல் பேனர்கள் மூலம் பெரிதாக பிரசுரித்து அதை சென்னையில் உள்ள வங்கிகள் முன்பு வைத்து பொதுமக்களிடமிருந்து தகவலைப் பெறவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக கிட்டத்தட்ட ஆயிரம் டிஜிட்டல் பேனர்களுக்கு ஆர்டரும் கொடுத்திருந்தனராம். மேலும் வங்கிகள் முன்பு வைக்க அனுமதியும் பெறப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாகவே வினோத்குமாரும், அவனது கும்பலைச் சேர்ந்தவர்களும் போலீஸாரிடம் சிக்கி கொல்லப்பட்டு விட்டனர்.

ஒருவேளை டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்ட முதல் கொள்ளைக் கூட்டத் தலைவன் என்ற பெயர் வினோத்குமாருக்குக் கிடைத்திருக்கும்.

English summary
Chennai police had planned to put up digital banners in front of all banks in the city to seek information about the gand leader Vinodh Kumar. But he was caught and killed in encounter today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X