For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாழ்வாதாரம் பாதிப்பு... மின்கட்டண உயர்வை எதிர்த்து 7ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி ஏப்ரல் 7ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் ரூ.7,874 கோடி அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசின் மின்வாரியம் சார்பில் அளித்த பரிந்துரையை ஏற்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் இந்த மின் கட்டண உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி வருகிற 7-ந் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்களின் முன்பு தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், ஆதரவாளர்களும், பொது மக்களும் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
DMDK chief VIjayakanth has said that his party will hold a protest demonstration against power tariff hike on April 7.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X