For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரியர்களை அவமதிக்கிறது தகுதித் தேர்வு :ஆசிரியர் சங்கம் கண்டனம்

Google Oneindia Tamil News

சிதம்பரம்: தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு நடத்தப்படுவது என்பது ஆசிரியர் சமூகத்தை அவமதிக்கும் செயல் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேர்தல் நேரத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் ஜெயலலிதா மறந்துவிட்டார்.

இதனால் ஆசிரியர் சமுதாயம் அதிர்ச்சிக்கு உள்ளாகி போராட்டம் நடத்த உள்ளது. இதைத் தடுக்கவே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. தகுதித் தேர்வு நடத்துவது என்பது ஆசிரியர் சமுதாயத்தையே அவமானப்படுத்துவது என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும்.

ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தத் தவறினால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஜூன் 10-ந் தேதி நடைபெறும் மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்

English summary
The Tamilnadu Teachers Union has opposed to hold teachers’ eligibility test (TET).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X