For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்வியின் வாழ்க்கையில் ஒளியேற்றிய ''ரங் தே"

By Chakra
Google Oneindia Tamil News

Selvi
பெங்களூர்: எத்தனையோ குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினரின் வாழ்க்கையில் ஒளியேற்றக் கூடிய பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட 'ரங் தே' நிறுவனம் கோயம்புத்தூரைச் சேர்ந்த செல்வியின் வாழ்க்கையையும் மாற்றிக் காட்டியிருக்கிறது.

செல்வி... கோயம்புத்தூரில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயிலுக்குச் செல்பவர்கள் இவரைப் பார்க்க நிறைய வாய்ப்பிருக்கிறது. இந்த கோயிலுக்கு அருகே சிறிய நடமாடும் குளிர்பானக் கடை ஒன்று இருக்கிறது. பெரும்பாலான முருக பக்தர்கள் சாமியை தரிசித்துவிட்டு திரும்பும்போது செல்வியின் கடையில் நொறுக்குத் தீனிகளையோ குளிர்பானத்தை வாங்கி குடித்துவிட்டோ திரும்புவது வழக்கம்.

ஆனாலும் செல்வியின் பொருளாதார நிலைமை மோசமாகவே இருந்தது. ஆனால் இப்பொழுது அவருக்கு முன்னைவிட மகிழ்ச்சியான ஏற்றமான வாழ்க்கை... முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ரூ.500 சம்பாதிக்கவே படாதபாடுபட்ட செல்விக்கு இப்போது ஒரு நாளைக்கு ரூ.1,000 கிடைக்கிறது என்பது பெரும் மகிழ்ச்சிதானே!

செல்வியின் இந்த வாழ்க்கையில் ஏற்றம் எப்படி ஏற்பட்டது?

இணையத்தளம் மூலம் கடனுதவி வழங்கும் "'ரங் தே'" குறு கடன் உதவி அமைப்பை செல்வி அணுகிறார். அவருக்கு 'ரங் தே' கை கொடுத்தது!.

பிறகென்ன... தமது நடமாடும் தள்ளு வண்டிக் கடையை நிரந்தரக் கடையாக மாற்றினார்... கூலாக வாடிக்கையாளர்கள் குளிர்பானங்களை குடிப்பதற்கு வசதிகளையும் செய்தார்.

சீசன் முடிந்துவிட்டால் அடுத்து என்ன செய்வது என தவித்த செல்விக்கு இப்போது கிடைக்கும் கூடுதல் வருமானம், சீசன் இல்லாத காலத்தை கஷ்டமில்லாமல் ஓட்ட நிச்சயம் பயன்படும்.

செல்வியின் முகத்தில் 'ரங் தே' நிறுவனத்தால் இப்பொழுது மகிழ்ச்சி ரேகைகள்...

பாத்திமா, கேரளா

தமிழ்நாட்டின் செல்வியின் கதையைப் போன்றதே கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பாத்திமாவின் வாழ்க்கையும்...

அன்றாட உணவில் அவசியம் தேவைப்படுவது கடுகு, சீரகம், மிளகு போன்ற ஸ்பைஸிகள்... பாலக்காட்டைச் சேர்ந்த பாத்திமா ஒரு தினக்கூலிதான்.. அத்துடன் இத்தகைய சிறுசிறு பொருட்களை கடைகளில் இருந்து அக்கம்பக்கம் வீடுகளில் விற்று வந்தார். முதலில் பாத்திமாவின் இந்த சிறு வர்த்தகத்தைக் கூட குடும்பத்தினர் எதிர்த்தனர். நாளடைவில் இதனை உறவுகள் ஆதரிக்க தமது விற்பனையை விரிவாக்க திட்டமிட்டார். ஆனால் அவரிடம் எந்த முதலீடும் இல்லை... 'ரங் தே' நிறுவனத்திடம் கடனுதவிக்கு விண்ணப்பித்தார்...

பிறகென்ன? ரூ.7,500க்கு மொத்தமாக பொருட்களை வாங்கினார்.. அதை சிறு சிறு பாக்கெட்டுகளில் உள்ளூர் கடைகளில் இப்பொழுது விற்று வருகிறார்.. உள்ளூர் கடைக்காரர்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைத்தால் பிறகென்ன?

பாத்திமாவுக்கு வங்கி மூலமே 'ரங் தே' நிறுவனம் கடனுதவியை ஏற்பாடு செய்துள்ளது. Rang de நிறுவனத்தின் நோக்கம் என்னவெனில் குறைந்தவாய் உள்ள பிரிவினருக்கு கை தூக்கிவிடுவதுதான்!.. கொஞ்சம் பணம் படைத்தவர்கள் ரூ100 அல்லது அதற்கு மேல் நிதி உதவி கொடுத்தால் அதை குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினரின் வளமான வளர்ச்சிக்கு ரொம்பவும் குறைவான வட்டியில் கடனுதவியாக வழங்குகிறது 'ரங் தே'.

சரஸ்வதி தேவி..ஜார்க்கண்ட்

தமிழகத்தின் செல்வி, கேரளத்தின் பாத்திமாவைப் போல ஜார்க்கண்ட்டின் சரஸ்வதி தேவியும் 'ரங் தே' யால் பயன்பெற்றவர்தான்...

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி மாவட்டத்தில் பண்டு தாலுகாவில் கம்பாரியா கிராமம்தான் சரஸ்வதி தேவிக்கு சொந்த ஊர்...70 சதவீதம் பேர் விவசாயத்தையே நம்பி உள்ளான்ர்! இந்த மக்களுக்கு 6 மாதம்தான் வருவாய் கிடைக்கும்.. பெண்களின் நிலைமையோ படு மோசம்! மாறிப்போய்விட்ட காலநிலையால் அவர்களது விவசாயமும் கூட பொய்த்துப் போனது!

இந்த சூழலில் சரஸ்வதி தேவி, ஆதிவாசி மகிளா சமுக் என்ற மகளிர் சுய உதவிக் குழுவில் இணைகிறார்.. தன்னை ஒரு தொழில்முனைவோராக வெளிப்படுத்துவதில் ரொம்பவே சரஸ்வதிதேவி ஆர்வம் காட்டினார்.. காலையில 8 மணிக்கு நடக்கிற பயிற்சி முகாம்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கூட வந்து கலந்து கொள்வார்.

மகளர் சுய உதவிக் குழு மூலமாக அவருக்கு ரூ8 ஆயிரம் கடனுதவி கிடைக்க உதவி செய்தது 'ரங் தே' நிறுவனம். இப்ப அவரும்கூட ஒரு தொழில்முனைவோர்தான்!

ராங் டி நிறுவனத்தால் 13 மாவட்டங்களில் 13 ஆயிரம் பேர் பயனடைந்திருக்கின்றனர் இதுவரை.. இனியும் இந்தப் பட்டியல் நீளும்..

'ரங் தே'

English summary
makes which has vison of make poverty history in India by reaching out to underserved communities through microcredit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X