For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சன் டிடிஎச் நிறுவனம் ரூ. 25 கோடி வரி பாக்கி: அமைச்சர்

Google Oneindia Tamil News

Sun Direct
சென்னை: டிடிஎச் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை அந்த நிறுவனங்கள் கட்ட மறுத்து கோர்ட்டுக்குப் போயுள்ளன. இதில் சன் டிடிஎச் நிறுவனம் மட்டும் ரூ. 25 கோடி வரி பாக்கியை வைத்துள்ளது என்று மாநில வணிகவரித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டசபையி்ல தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிடிஎச் நிறுவனங்களுக்கு 30 சதவீத வரி விதிப்பை அறிவித்தார். ஆனால் அவை கட்ட மறுத்து கோர்ட்டுக்குப் போயுள்ளன. சன் டிடிஎச் உள்பட மொத்தம் 6 சேவை நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன.

வரி விதித்தால் கட்ட வேண்டியதுதானே, அதை மறுத்து கோர்ட்டுக்குப் போவது என்ன நியாயம். சன் டிடிஎச் நிறுவனம் மட்டும் இதுவரை ரூ. 25 கோடி வரிபாக்கியை வைத்துள்ளது. இது அவர்கள் கொடுத்த தோராயக் கணக்கு.

அதேபோல திமுக குடும்பத்திற்குச் சாதகமான இன்னொரு விஷயம், தமிழகத்திற்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு விமான எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. இதனால் தமிழ்நாட்டிற்கு வருடத்திற்கு ரூ.240 கோடி வரி இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும் இந்த அறிவிப்பை திமுக எதிர்க்கவில்லை. காரணம், அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு இது ஆதாயமாக அமைகிறது என்பதால் என்றார் அமைச்சர் சண்முகம்.

English summary
Sun DTH has Rs. 25 cr tax pending, said commercial tax minister C.V.Shanmugam in the assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X