For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியரசுத் தலைவராக பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த தீவிர முயற்சி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதற்கான லாபிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் சபாநாயகருமான பி.ஏ.சங்மா கூறியதாவது:

குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் பழங்குடி பிரிவினரின் ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ந் தேதி நடைபெற உள்ளது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக நான் போட்டியிடவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளையும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த கொள்கை அளவில் ஒப்புக் கொள்ள வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் பிறகே வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும்.

இந்த கருத்து நாட்டின் ஒட்டுமொத்த பழங்குடி மக்களின் விருப்பம். இது எந்த ஒரு அரசியல் கட்சியினுடைய கருத்தும் அல்ல. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. பாஜக தலைவர் கட்காரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவர்களாகிவிட்டனர். நாட்டின் பல கோடி பழங்குடி இன மக்கள் உள்ளனர். ஆனால் எந்த ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரும் இதுவரை குடியரசுத் தலைவரானது இல்லை.

இந்த விஷயத்தை தற்போது விவாதிக்கத் தொடங்கியிருக்கிறோம். மே 9-ந் தேதியன்று நடைபெறக் கூடிய கூட்டத்துக்கு முன்பாகவோ அல்லது அதன் பின்போ அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நாங்கள் சந்திக்க உள்ளோம் என்றார் அவர்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் யார் என்ற விவாதம் தொடங்கியபோது பி.ஏ.சங்மாவின் பெயரும் அடிபட்டது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் பிரணாப் பெயரே அதிகளவில் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சங்மா தமக்கு ஆதரவாக ஒரு லாபியை உருவாக்கத் தொடங்கி உள்ளார். வெல்லுவாரா சங்மா?

English summary
Pitching for a tribal candidate for the President's post, NCP leader P.A. Sangma on Friday said efforts are on to make all political parties agree on it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X