டாஸ்மாக்கில் 13 வகை சரக்குகள் அறிமுகம் - முறைகேட்டைத் தடுக்க பில்லிங் மிஷின்

தமிழ்நாடு முழுவதும் 6802 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 4721 பார்கள் நடத்தப்படுகின்றன.
ஸ்காட்ச் விஸ்கி
புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வருவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது.
இதேபோல் 20 கடைகளில் மட்டுமே விற்கப்பட்டு வந்த ஸ்காட்ச் விஸ்கி இப்போது 194 கடைகளில் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய உயர்ரக மதுபானங்களை விற்க எப்.எல்.-2 என்ற தனி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
ஜில் பீர்
தற்போது கோடைகாலம் என்பதால் வழக்கம்போல பீர் விற்பனை அமோகமாக இருக்கிறது. ஆனால் போதுமான கூலிங் இல்லை என்ற குடிமகன்களின் குமுறலைக் கேட்டு ரூ7.50 கோடியில் 2500 கடைகளுக்கு குளிர்சாதன்ப் பெட்டிகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுசரக்கு
அண்மையில் க்ளோவிஸ் எக்ஸ்.ஓ., என்ற பிரெஞ்ச் கிரேப் வகையை சார்ந்த பிராந்தி விற்பனை டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. காக்னக் எக்ஸ்.ஓ மற்றும் பிரெஞ்ச் கிரேப் பிராந்தி ஆகிய இறக்குமதி செய்யப்பட்ட உயர்வகை மதுவுடன் கலந்து தயாரிக்கப்பட்ட பிராந்தி இது. மொத்தம் 13 ரகங்கள் தற்போது அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது
பில்லிங் மிஷின்
டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேட்டைத் தடுக்க ரூ5 கோடியில் 2500 கடைகளுக்கு பில்லிங் மிஷின்களை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகள், வழிபாட்டு தலங்களிலிருந்து 91 கடைகள் கடந்த 10 மாதங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications