ஒடிசாவில் மாவோயிஸ்டுகளை தடுக்கவில்லை என்பதா?: உள்துறை அமைச்சகத்துக்கு நவீன் எதிர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
Naveen Patnaik
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வளர்ந்து வரும் மாவோயிஸ்டுகளின் நடவடிகைகளை ஒடுக்க மாநில அரசு தவறிவிட்டது என்று உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டி கடிதம் அனுப்பியிருப்பதற்கு மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் விவகாரத்தில் உள்துறை அமைச்சகத்தை மிகக் கடுமையாக புரட்டி எடுத்திருந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. டெல்லியில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டிலும் தமிழக அரசை அலட்சியமாக நடத்துகிறது உள்துறை அமைச்சர் என்று பகிரங்கமாகவே ஜெயலலிதா வறுத்தெடுத்தார்.

இப்பொழுது ஜெயலலிதாஅண்ணனாக கருதுகிற ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நேரம்..

ஒடிசாவில் மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளை ஒடுக்க மாநில அரசு தவறிவிட்டது என்று புகார் கூறி உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இப்புகாரை நிராகரித்துள்ள முதல்வர் நவீன் பட்நாயக், இதற்கு உரிய விளக்கமான பதில் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இத்தாலியர்கள் இருவர் கடத்தப்பட்டபோதும் சரி, பின்னர் எம்.எல்.ஏ. கடத்தப்பட்டபோதும் சரி உள்துறை அமைச்சகத்துக்கும் ஒடிசா மாநில அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. இப்பொழுது இது உச்சத்தை எட்டியிருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
With the Centre accusing the Odisha government of failing to check Maoist activities, chief minister Naveen Patnaik on Saturday dismissed the allegation as incorrect, and said that a reply would be sent on Monday.
Please Wait while comments are loading...